விளாத்திகுளம் அருகே விபத்தில் மூளை சிதறி முதியவர் பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விநாயகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் துரை (57), இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார், இந்நிலையில் வேலையின் காரணமாக விளாத்திகுளம் மற்றும் எட்டையாபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டி சென்று கொண்டிருந்த போது, எட்டையாபுரம் குமாரகிரி தேசிய நெடுஞ்சாலையில் துரை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலை நசுங்கி மூளை சிதறி துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய எட்டயபுரம் காவல் நிலைய போலீசார், துறையின் உடலை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.