விளாத்திகுளத்தில் லாரி டிரைவருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு : மனைவியை
வெட்டிக்கொண்ட கணவர் கைது. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (45) என்பவர் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
அவரது மனைவி அம்பிகாவதி(40) இவர்
ராமச்சந்திராபுரம்- முத்தையாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து
வந்துள்ளார்.
இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே நடத்தை சந்தேகத்தில்
அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 27-10-2023
காலை 10-30 மணியளவில் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட
பிரச்சனையில் அம்பிகாவதியை அவரது கணவர் லட்சுமணன் அரிவாளால் கழுத்து மற்றும்
முகத்தில் வெட்டியதில் அம்பிகாவதி அவர்களது வீட்டின் முன்பே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்த விளாத்திகுளம்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அம்பிகாவதியின் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், மனைவியை கொலை செய்த லட்சுமணன் விளாத்திகுளம்
காவல் நிலையத்தில் தானாகவே வந்து சரணடைந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் காவல்துறையினர் லட்சுமணனிடம் விசாரணை மேற்கொண்டதில்,
லட்சுமணனின் மனைவி அம்பிகாவதி விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஒரு லாரி ஓட்டுனரிடம்
கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும். இதை லட்சுமணன் பலமுறை கண்டித்தும் அம்பிகாவதி
கேட்காததால் அம்பிகாவதியை அறிவாளால்
வெட்டிக் கொண்டதாக லட்சுமணன் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்ததாக
கூறப்படுகிறது. இதனை எடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் லட்சுமணனை
விளாத்திகுளம் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.
Vilathikulam
லாரி டிரைவருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு : மனைவியை வெட்டிக்கொண்ட கணவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
:கருப்பசாமி கோவிலில் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த MLA மார்க்கண்டேயன்!
அடுத்த
பவானீஸ்வரர் மேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026