விளாத்திகுளம் அருகே பார்வதி சமேத பவானீஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.  உலகம் முழுவதும் இன்று அனைத்து சிவன் சிவன் கோவில்களிலும்  அன்னாபிஷேக வழிபாடானது இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பசி பட்டினி இன்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும், நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சிவபெருமான் தனது திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவமானது ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் நடைபெறுவது ஐதீகம், இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வதி சமேத  பவானீஸ்வரர் திருக்கோவிலில்  பவானீஸ்வரர்   மேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்து பஞ்சமுக தீபா தாரணை காட்டி   அன்னாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.