விளாத்திகுளம்  அருகே ரூ‌1.90 கோடி மதிப்பில் புதிய பாலம்:கருப்பசாமி கோவிலில் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த MLA மார்க்கண்டேயன்!   விருதுநகர் மாவட்டம் எல்லை பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  பழைய பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.1.90-கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று கருப்பசாமி கோவிலில் தேங்காய் உடைத்து பூஜை செய்து பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பழைய பாலத்தினை கிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கிவைத்தார்.