தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் பொம்மையாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அறிவுறுத்தலின்படி கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் விஜய் ஸ்ரீ தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முன்னிலையில் கால்நடை மருத்துவ குழுவினர்கள் விளாத்திகுளம் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் இணைந்து சுமார் 1085-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். இம்முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்க பட்டது.மேலும் இம்முகாம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக பங்கேற்ற பொதுமக்கள் பாராட்டினர்.
இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர் கருப்பசாமி, பாலமுருகன், புவனேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.