தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் - "தொழில்முனைவோரின்தொழில் தொடக்க கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருந்தரங்கில் கல்லூரி செயலர் அருட்தந்தை விக்டர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்கள்,
கல்லூரி முதல்வர் முனைவர். திலகா மற்றும் அருட்தந்தை பீட்டர் ஆரோக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முனைவர் ராஜன் மற்றும் சென்னை கிறித்துவக்கல்லூரி பேராசிரியர் முனைவர் வை. முத்துக்குமார் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் மற்றும் தொழில் தொடங்குவதற்கான செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இக்கருந்தரங்கில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் வட கொரியா நாட்டைச்சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆய்வுகட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. மேலும் இக்கருந்தரங்கில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள்200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இக்கருந்தரங்கில் அருட்தந்தையர்கள் அலெக்ஸாண்டர் சுரேஷ், தாமஸ் அல்போன்ஸ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருந்தரங்கிற்கான ஏற்பாட்டினை வணிகவியல் துறை மற்றும் நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் அருட்தந்தை அந்தோணி சாமி, முனைவர். பிரபு, முனைவர்.பொன்மணி, மு.மகாராஜா, கார்த்திக், கண்மணி, ரஹ்மான் மற்றும் நிவேதா செய்திருந்தனர்.
Vilathikulam
தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
அடுத்த
தூத்துக்குடி உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 441 ஆண்டு திருவிழாவில் வெளிநாடு , இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் !
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026