விளாத்திகுளம் அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5.75-கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு கட்டிடம்,புதிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்வில் மருத்துவ அலுவலர் ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.