சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்த விளாத்திகுளம் நூலக வாசகர்கள்?

பாராளுமன்ற உறுப்பினர் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது விளாத்திகுளம் கிளை நூலக வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் விளாத்திகுளம் கிளை நூலகத்தில் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு தேவையான இருக்கைகள் மற்றும் மேஜை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரும்பொருட்டு கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் மற்றும் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதா ஜீவன் அவர்களின் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  விளாத்திகுளம் கிளை நூலகத்தில் அடிப்படை தேவைகளை நேரில் சென்று இன்றைய தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் கிளை நூலகம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்  குளிரூட்டப்பட்ட அறை,புதிய தரைத்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு தேவையான இருக்கைகள், பெஞ்ச் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகமாக  மாற்றம் செய்ய ஆய்வு செய்தார்கள். 

நிகழ்வில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் நூலகர் சுமித்ரா   விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி  விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் சென்றாயப் பெருமாள் வார்டு உறுப்பினர் குறிஞ்சி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்பில் நாராயணமூர்த்தி  முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.Kராமமூர்த்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.