தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

தமிழகத்தில் மது கலாச்சாரம் காரணமாக இளைஞர்கள் முதல் பெண்கள் வரை போதை பழக்கத்திற்கு அடிமையாகி கலாச்சார சீரழிவு உருவாகி வருகிறது.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி கல்லூரி அருகே மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வைத்து பொதுமக்களுக்கு சீரழிவுக்கு காரணமாக செயல்பட்டு வருகிறது.  

எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.