தூத்துக்குடியில் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 9 வயது மாணவன் ஹர்சன் தொடர்ந்து நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் முப்பது நிமிடங்கள்  மிதந்து குளோபல் உலக சாதனை  படைத்தார் !

தூத்துக்குடி சேர்ந்த 9 வயது சிறுவன் ஹர்சன் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்றுள்ள இவர் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சலில் மிதப்பதற்கான உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில் நீச்சல் குளத்தில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது இதில் மாணவன் ஹர்சன் காலை 10 மணி முதல் ஹர்ஷன் தொடர்ந்து மிதந்தவாறு   மிதப்பதற்கான உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் இதில் ஹர்சன் தொடர்ந்து நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தொடர்ந்து மிதந்து குளோபல் உலக சாதனை நிறுவன சாதனையில் இடம் பிடித்தார் சாதனை முடித்து வெளியே வந்த சிறுவனை பெற்றோர் பயிற்சியாளர்கள் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

இதைத் தொடர்ந்துசாதனை சிறுவன் ஹர்சனை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி  சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.