தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அழகுகள் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது இதன்காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்குள்ள அழகுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் அவ்வப்போது அழகுகளில் பழுதுகள் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று பிற்பகலில் 3வது மற்றும் 4வது அழகில் பழுது காரணமாக அந்த அழகுகளில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு பழுது சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பராமரிப்பு காரணமாக ஐந்தாவது அழகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐந்தாவது அழகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
தற்போது அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகள் நிறுத்தப்பட்டுள்ள காரணமாக அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது