தூத்துக்குடி  முத்தையாபுரத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு வட்டிக்கு பணம் கொடுக்கும் நபருடன் சேர்ந்து பல லட்சம் மதிப்புள்ள  3-செண்ட்  இடத்தின் பத்திரைத்தை வைத்து  சொந்த பாட்டியை ஏமாற்றிய பேரன் மற்றும் உடந்தையாக இருந்த நபர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியை சார்ந்த சண்முகம் மனைவி தெய்வானை(71) இவர்களுக்கு முத்துராஜ்,மாரியம்மாள் என்ற இரண்டு வாரிசுகள் உள்ள நிலையில்  சண்முகம் கடந்த 2002-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமான நிலையில் தெய்வானை முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை-யில் வேலை பார்த்து சிறுக சிறுக சேர்த்து முத்தையாபுரம் பாகுதியில் 3-செண்ட் இடம் வாங்கி உள்ளார்.

மேலும்  தனது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து அவர் தனியாக வசித்து வந்துள்ளார் இந்நிலையில் தெய்வானை மகள் மாரியம்மாளுக்கு  முருகன்,லிங்காராஜ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர் இதில் முருகன் என்ற பேரன் சாலை விபத்து ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு சிக்கி  பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சிகிச்சை-க்காக பணம் அதிக தேவைபட்ட நிலையில் தெய்வானை-யின் மகள் வழி  மற்றொரு பேரனான லிங்கராஜ்  என்பவர்  தனது பாட்டி இடத்தின் பத்திரத்தை  தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரபட்டி பகுதியை சார்ந்த சுரேஷ்குமார்  என்பவரிடம் வைத்து பணம் பெற்றுள்ளனர் பின்னர் சிகிச்சை முடிந்து எல்லாம் சரியாகிய பின்பு பணத்தை திருப்பி கொடுத்து பத்திரத்தை திருப்பி வாங்க முயன்றபோது அதனை திருப்பி கொடுக்க முன்வராமல் இடத்தை ஆக்கிரமிக்க நினைத்து கடந்த 4-ஆண்டுகளாக இழுத்தடித்து வந்துள்ளனர் இதில் தனது பேரனும் பணம் வாங்கிய நபருடன் சேர்ந்து பணத்திற்காக சொந்த பாட்டியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவர இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் கடந்த 4-ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட தெய்வானை இன்று அவரது  மகன் முத்துராஜ் ஆகியோர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் மேலும் படிப்பறிவு இல்லாததை கருதி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இதற்கு தனது சொந்த பேரனும் உடந்தையாக இருந்துள்ளார் எனவே உடனடியாக மோசடி செய்த நபர் அதற்கு உடநதையாக இருந்த தனது பேரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் உள்ள தனது 3-செண்ட் இடத்தை ரத்து செய்து மீட்டுதர வேண்டும் என பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் அவரது மகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.