தருவைகுளம் சமத்துவபுரத்தில் லாரி ஓட்டுநர் விபத்தில் பலி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை -பாண்டியாபுரம் மாரியப்பன் என்பவரின் மகன் அருண்ராஜா (26) லாரி ஓட்டுநர் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து வேப்பலோடைக்கு அருண் ராஜா தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது தருவைக்குளம் சமத்துவபுரம் அருகே உள்ள பாலத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் அருண் ராஜா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்
இதனை எடுத்து அருண் ராஜாவின் உடலை கைப்பற்றிய தருவைகுளம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்