AGAVAN MEDIA EXCLUSIVE:

விளாத்திகுளம் அருகே கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உட்பட 3பேர்  கைது!

சின்னவநாயக்கன் பட்டி கிராமத்தில் அழகுசுந்தரபாண்டி என்பவரை வழிமறித்து  அறிவாளால் வெட்டிய  வழக்கில் மனைவி கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கவுண்டம்பட்டி கிராமத்தை அழகு  சுந்தர பாண்டி(32) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  புனித அணி எப்சிபா  (29) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு  திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அழகுசுந்தரபாண்டி விவசாயம் செய்து வருகிறார். தற்போது அழகு சுந்தரபாண்டி மற்றும் புனித அணி எப்சிபாவுடன் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்    

இந்நிலையில் புனித அணி எப்சிபாவுக்கும்   கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த  சுந்தரராஜ் என்பவரின் மகன் மாரிராஜ்(31) என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 08-06-2023 இரவு அழகு சுந்தரபாண்டி நாகலாபுரத்திலிருந்து சின்னவநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது  சின்னவநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே  அரிவாளுடன் வந்த நான்கு பேர்  அழகு சுந்தரபாண்டியை தாக்கியுள்ளனர் ,இதில் காயமடைந்த அழகு சுந்தரபாண்டியை அக்கம் பக்கத்தினர்  விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புனித அணி எப்சிபா விற்கும்  மாரிராஜ்கும் தகாத தொடர்பு இருந்து வந்ததாகவும், இதற்கு இடையூறாக இருந்த அழகு சுந்தரபாண்டியை  கொலை செய்வதற்காக புனித அணி எப்சிபா மற்றும் மாரி ராஜ்  கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்  ஆகியோர் கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டியது,தெரிய வந்தது. இதனை அடுத்து  கொலை செய்ய திட்டமிட்ட  புனித அணி எப்சிபா(29) மற்றும்  உடந்தையாக இருந்த மாரி(31)ராஜ் சரவணன்(20) ஆகிய மூன்று பேரையும் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கூலிப்படையை சேர்ந்த மற்ற மர்ம நபர்களை  சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.