பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் கோவில்பட்டிக்கு மது பாட்டில் கடந்து வந்த மூன்று பேர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்!

பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிக்கு சட்ட விரோதமாக மது பாட்டில் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில்  ரயில்வே போலீசார்,  கோவில்பட்டி மதுவிலக்கு போலீசார் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ஆகியோர் ‌ மைசூர் எக்ஸ்பிரஸ்சில் வந்து பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது காடல்குடியை சேர்ந்த ஜெயக்குமார், மணிகண்டன், செல்லப்பாண்டி ஆகியோர் வைத்திருந்த பைகளில் மது பாட்டிலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பைகளில் சுமார் 61 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. கிணற்றிலிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து கோவில்பட்டி பகுதிக்கு ரயில் மூலமாக சட்ட விரோதமாக மது பாட்டில் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், ரயில்வே போலீசார், மது விலக்கு போலீசார் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்