வேம்பார் பச்சையாபுரம் காட்டுப் பகுதியில்  அடையாளம் தெரியாத ஆண் சடலம்?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் - பச்சையாபுரம் கிராம காட்டு (55) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக  சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சடலத்தை  மீட்ட சூரங்குடி காவல் நிலைய போலீசார் உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதேச ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர் யார் என்பது குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.