கீழ ராமநதி
கிராமத்தில் முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழ ராமநதி கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய விமான மற்றும் பரிவார தேவதையலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது!
முன்னதாக யாகசாலை
கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜை கோ பூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜை தீபாதாரணை
நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சர்வசாதாரகர் சிவ ஆகம ரத்னா பாலாஜி சிவாச்சாரியார் முழங்க கடம் புறப்பாடு ஆலயம் வலம் சென்று முத்தாலம்மன் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூலவர் முத்தாலம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீவாதாரணை நடைபெற்றது கமுதி கல்லுப்பட்டி கீழ ராமநதி மேலராமநதி உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதான வழங்கப்பட்டது.