கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியிறுப்பு பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு சந்தீப் நகரில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியிறுப்பு பகுதிக்கு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு சந்தீப் நகரில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியிறுக்கும் பகுதியில் போதுமான சாலைவசதி, குடிநீர் வசதி இல்லை என்பதால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், விரைந்து அப்பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும், போதுமான அளவு குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தமிழ்; மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினர்.