புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு மற்றும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெரு வடக்கு பகுதியில்  4 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு மற்றும் வடக்கு திட்டங்குளத்தில்3 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெரு வடக்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 4 லட்சம் ரூபாய் மதீப்பிட்டில் புதிய பேவர்பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து வடக்கு திட்டங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்முத்துராமலிங்க தேவர் சிலை பகுதியில் 3 லட்ச மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்.