தூத்துக்குடி தெர்மல் நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்க கூடிய ஓடை பாலம் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது உயிருக்கு ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் பயணம் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி லயன் ஸ்டோன் பகுதி வழியாக தெர்மல் நகர் ,ஒத்த வீடு ,காதர் மீரான் நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கக்கூடிய பாலம் மச்சாது பாலம் இந்த இந்தப் பாலம் இருக்கும் பகுதி முழுவதும்உப்பளங்கள் நிறைந்த பகுதி இதனை உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பளங்களுக்கு லோடு ஏற்ற வரும் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர் மேலும் தெர்மல் நகர் ,காதர் மீரான் நகர் ,ஒத்த வீடு பகுதி மக்கள் தூத்துக்குடி வருவதற்காக இந்த மச்சாது பாலம் வழியாக வருவதால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் குறைவாகும் என்பதால் இந்த பாலம் வழியாக தூத்துக்குடி மாநகரத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது இந்த மச்சாது பாலம் சேதமடைந்து முற்றிலுமாக இடிந்து உடைந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது
மேலும் இந்தப் பாலத்தை பயன்படுத்தும் ஒரு சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சத்துடனே இந்த பாலத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பாலத்தை சரி செய்து பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.