ராமேஸ்வரத்தில் ஆயிரகணக்கில் குவிந்த சுற்றுலா
பயணிகள்! பல மணி நேரம் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்- போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
தமிழகத்தில்
காலாண்டு தேர்வு விடுமுறை மற்டறும் வார விடுமுறையையொட்டி ராமேஸ்வரத்திற்கு தினசரி
நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
வந்த வண்ணம் உள்ளதால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுவதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் உள்ளூர்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவின்
மத்திய பிரதேஷ், பீகார், ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலா
பயணிகள் ராமேஸ்வரத்தை சுற்றி
இருக்கக்கூடிய தனுஷ்கோடி, கோதண்டராமர்
கோயில், அரிச்சல் முனை,
ராமர் பாதம், கலாம் நினைவகம்
உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் குவிவதால் அங்கும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில்
போதிய கார் பார்கிங் வசதி இல்லாததாலும், வாகனங்கள் சென்று வர விரிவான சாலை வசதி இல்லாததாலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்டுகிறது. எனவே
உடனடியாக கார் பாhக்கிங் வசதி
செய்து கொடுத்து போக்குவரத்து நெரிசல்
ஏற்படாமல் இருக்க ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு
ராமேஸ்வரத்தில் ஆயிரகணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Admin
1 நிமிட வாசிப்பு