தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இதனை அடுத்து  தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம்,கண்மாய்கடற்கரை உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் திமுகவினர்  விதைத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாயபுரம் போப் கலைக்கல்லூரி சார்பில் 5ஆயிரம் பனை விதைகள் நடும்பணி இன்று காலை தொடங்கியது.இந்த பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிமாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார்ஆகியோர் துவங்கி வைத்தனர்.இதில் மாநகராட்சி அதிகாரியில் ஊழியர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர்.