தென்காசியில் வழக்கறிஞர் அசோக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தினர்.
தென்காசியில் வழக்கறிஞர் அசோக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் அசோக்குமார் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதால் தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டத்தை சட்டமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.