கொடுங்கையூரில் கணவர் போன் வாங்கித் தரவில்லை என்ற கோபத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை. 

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 35 இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது சதீஷ்குமார் கிண்டியில் உள்ள தனியார் வங்கியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா 31 இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளது. சதீஷின் தாய் தந்தையரும் இவர்களுடன் தங்கி உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பூர்ணிமாவின் செல்போன் சரிவர இயங்காததால் தனது கணவர் சதீஷ்குமாரிடம் புதிய போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார் அவர் சில நாட்களில் புதிய  போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.ஆனால் வாங்கி தரவில்லை இதனால் அடிக்கடி பூர்ணிமாவுக்கும் அவரது கணவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில் நேற்று மீண்டும் பூர்ணிமா செல்போன் கேட்டு உள்ளார் அப்போது சதீஷ்குமார் தற்பொழுது பணம் இல்லை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டில் உள்ள பெட்ரூமில் கதவை தாழிட்டு கொண்டு  மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார் குளியலறையில் இருந்த அவரது கணவர் கதவை தட்டியும் திறக்காதால் கதவை உடைத்துக் கொண்டு  தூக்கில் தொங்கி படி இருந்த பூர்ணிமாவை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகும் படி கூறியுள்ளனர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா சிகிச்சை பலனின்றி நேற்று இரவே உயிரிழந்தார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....