விளாத்திகுளம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியை விளாத்திகுளம்  யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ வைப்பார் மற்றும் வைப்பார் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதால், தங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  ஒன்றிய பொது நிதியிலிருந்து வைப்பார் பகுதியில் குடிநீர் கிணறு அமைக்க ரூ.10 லஞ்சமும் அதேபோன்று கீழ வைப்பார் பகுதி மக்களுக்கு குடிநீர் கிணறு அமைக்க ரூ.10 லட்சம் என மொத்தமாக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று வைப்பார் ஆற்றுப்பகுதியில் குடிநீர் கிணறு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கிணறு அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கீழவைப்பார், வைப்பார் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.