கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது!
கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி அருகே வள்ளிநாயகபுரத்தைச் சார்ந்த ராமநாதன் மகன் காளிராஜ் வயது 26 ,அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவன் மகன் பாண்டிச்செல்வம் வயது 23, லட்சுமணன் மகன் பால்ராஜ் வயது 35 ஆகியோர் அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் செய்தனர் புகாரின் பேரில் 3 பேரையும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.