ஆங்கில கல்வியில் இருந்து தமிழ் வழி கல்வி அரசுப் பள்ளியில் முழுமையாக சேர்க்கை,பூமாலை சால்வை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்.புன்னகையுடன் வரவேற்ற அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியர்  நியமிக்க பெற்றோர் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம் கொட்டக்குடி கிராமத்தில் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியர் ஆறு மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வரும் நிலையில் நாளடைவில் பள்ளியில் மாணவர்கள்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து மாணவர்கள் இன்றி பள்ளியை மூடும் அவல நிலை  ஏற்பட வாய்ப்புள்ளது,இந்த நிலையில் தங்களது கிராம பள்ளி மூடுவிழா காணும் நிலையை அறிந்த கிராம மக்கள் கிராம கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

கிராமம் ஒன்று கூடிய கூட்டத்தில் மொட்டக்குடி கிராமத்தில் இருந்து  நாள்தோறும் கமுதி முதுகுளத்தூர் அபிராமம் பரமக்குடி உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மெட்ரிக் ஆங்கில வழி கல்வி நிலையங்களுக்கு25 மாணவ மாணவிகள் சென்று வந்தவர்களை,தங்களது கிராம பள்ளியில் தமிழ் வழி கல்வியில் கல்வி பயில  கிராம ஊர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது அதன் அடிப்படையில் இன்று தமிழ் வழி கல்வி பயில சென்ற புதிய மாணவ மாணவிகளை பெற்றோர்கள் சால்வை மாலை அணிவித்து அன்புடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தன அவர்களை முன்னாள் முதுகுளத்தூர்  சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் தர்மராஜன் மாணவர்களின் பெற்றோர் கிராம பொதுமக்கள் அன்புடன் வரவேற்றனர்.கொட்டகுடி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கு பணிக்கு சேர்ந்து ஆறு நாட்களில் கிராமத்தை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைத்து ஆங்கில கல்வி பயில சென்ற மாணவர்களை தனது தமிழ் வழி பள்ளியில் சேர்க்கை முயற்சித்த ஆசிரியருக்கு பாராட்டு குவிகிறது.நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் பெஞ்ச் சேர் விளையாட்டு உபகரணங்கள் பள்ளி தளவாட பொருட்கள் அனைத்தும் பள்ளி கல்வி குழு மூலமாக செய்து கொடுக்கப்படும் எனவும்,ஆசிரியர்  பணியை நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது