விளாத்திகுளம் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில், காலையில் அமைச்சர் திறந்து வைத்த சுகாதார வளாக கட்டிடத்திற்கு மாலையில் பூட்டு?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் உட்புறம் ஏற்கனவே இருந்த பொது சிறுநீர் கழிப்பிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில், JSW -என்ற தனியார் நிறுவனத்தின் "CORPORATE SOCIAL RESPONSIBILITY" (CSR) -நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார வளாக கட்டிடம் திறப்பு விழா இன்று காலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த புதிய சுகாதார வளாக கட்டிடத்தை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிலையில், அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காலையில் ரிப்பனை வெட்டி திறந்து வைத்த சுகாதார வளாக கட்டிடத்தை பூட்டியே வைத்துள்ளனர்.

"JSW என்ற தனியார் நிறுவனம் சார்பில், புதியதாக கட்டப்பட்டு அமைச்சர் தலைமையில் திறப்பு விழா வைத்து பூட்டு போட்டு வைப்பதற்கு... பழைய சிறுநீர் கழிப்பிடமே கூட இருந்திருக்கலாம் என்று வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் முனுமுனுத்து வருகின்றனர்."
