கொளுத்தும் வெயியில் குடிக்க தண்ணீர் இல்லமால் மருத்துவமுகாமில் பரிதாவித்த பொதுமக்கள்- ஹாயாக குளிர் பானம் குடித்த மருத்துவ பணியாளர்கள் - கொந்தளித்த மக்கள் - மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யமால் திருப்பி அனுப்பட்ட மக்கள் - எட்டயபுரத்தில் நடத்த அரசு மருத்துவமுகாமில் பரிதாபம்தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரத்தில் உள்ள ராஜா மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. காலையில் இந்த முகாம் தொடங்கிய போதும், மிகவும் காலதாமதாக தான் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமுகாமினை பார்வையிட்டனர்.மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவகாப்பீட்டு திட்ட அட்டை, இலவச கண்கண்ணாடி என பயனாளிக்கு வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகம் வழங்கப்பட்டது. இதற்காக பயனாளிகள் காலை 9 மணியில் இருந்து காத்து இருந்தனர்.சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பயனாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற மருத்துவமுகாம் நடைபெறுவதாகவும், மேலும் மருத்துவகாப்பீடு அட்டை இம்முகாமில் வழங்கப்படுகிறது. அதனை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.ஆனால் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்காக மக்கள் அதிகளவில் காலையில் இருந்து காத்திருந்த போதும், ஒரே ஒரு கணிப்பொறி மட்டும் இருந்த காரணத்தினால் கூட்டத்தினை சமாளிக்க முடியவில்லை, அமைச்சர் கீதாஜீவன் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்த ஊழியர்கள், அமைச்சர் வெளியே சென்றது, இன்றைக்கு காப்பீடு அட்டை எடுக்க முடியாது தூத்துக்குடி வாங்க என்று வெளியே அனுப்பியதால் காலையில் இருந்து குடிநீர் கூட குடிக்கமால் காத்திருந்த பெண்கள் கொந்தளித்து போனார்.. இதையெடுத்து காவல்துறையினரை வைத்து பெண்களை வெளியே அனுப்பினர்.மேலும் 1500க்கு மேல் இம்முகாமில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் போதுமான குடிநீர் வசதி செய்யவில்லை என்பதால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பெயரளவிற்கு தண்ணீர் கேன் வைக்கப்பட்டு இருந்தாலும் அவை காலியாக தான் இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பொது மக்கள் என்ன செய்வது என்று தெரியமால் விழிபிதுங்கி நின்றனர். முகாமில் கலந்து கொண்ட மருத்துவ பணியாளர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இல்லை என்ற வேதனையுடன் இருந்த மக்கள் முன்பு அதிகாரிகள் குளிர்பானம் குடித்ததை வேண்டா வெறுப்பாக மக்கள் பார்த்தனர். ஒரு முதியவர் வெயிலின் கொடுமை தாங்க முடியமால், குளிர்பான பாட்டில் வைத்திருந்த மருத்துவ பணியாளரிடம், கேட்டு வாங்கி குளிர்பானத்தினை குடித்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

இவ்வளவு மக்கள் வரும் முகாமில் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யமால், போதிய மருத்துவ பணியாளர்கள், உபகரணங்கள் கொண்டுவரமால் இருந்தது பொது மக்கள் இடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பெயருக்கு நடத்துவதற்கு ஏன் இவ்வளவு விளம்பரம், இனிமே முகாமே வேண்டாம் என்று மனம் நொந்தபடி சென்றனர்.