கமலாபுரம் விளக்கு எட்டையபுரம் சாலையில் உள்ள புதிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் விளக்கில் எட்டையபுரம் சாலையில் 15-ஆவது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ்  ரூபாய் 6-10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையை,அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோ ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர்  மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத்தலைவர் சூர்யா அய்யன்ராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.