சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு இயந்திரத்தை பயன்பாட்டை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்....
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூபாய் 20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மேலும் விழாவில் கலந்து கொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா நுண்கதிர் பிரிவு அறையை திறந்து வைத்து இயந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.மேலும் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனையில் நுண் கதிர் பிரிவு துவக்கம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது...

மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவ இணை இயக்குனர் டாக்டர்.பிரேமலதா, தலைமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகர், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன்,
திமுக மாவட்ட பொருளாளர் இல.சரவணன்,
நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏராளமான கலந்து கொண்டனர்...