ரேஷனில் சீராக மற்றும் தரமான பொருட்கள் வழங்கவும் வலியுறுத்தி - தாசில்தார் முன்பு அவர் மேஜையில் ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் போராட்டம் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தரமான பொருட்கள் மற்றும் சரிவர பொருட்கள் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டி தாசில்தார் மேஜையில் தேமுதிகவினர் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்குவதில்லை என்றும், ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை தொழில்நுட்ப கோளாறு என்று கூறி பொருட்கள் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும், குறைவான பொருட்களை வழங்கிவிட்டு அதிகமான பொருட்கள் வழங்கியதாக குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு மெசேஜ் வருவதாகவும், பருப்பு சீனி எண்ணெய் வாங்க சென்றால், டீத்தூள் சோப்பு, மைதா, ரவை என மற்ற பொருட்களையும் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், கோதுமை சரிவர வழங்கப்படவில்லை என்றும் , எனவே நியாய விலைக் கடைகளில் கால தாமதம் செய்யாமல் , சரியான அளவில் தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் கைகளில் தரமற்ற அரிசி கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது மனுவை வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கச் சென்றபோது அங்கு அறை பூட்டப்பட்டிருந்ததால் அரை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தாசில்தார் வசந்த மல்லிகா மேஜையில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து தேமுதிகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.இதில் மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.சாமி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் நகரநிர்வாகிகள் பாலு பிரசன்னா பாபுமதிமுத்து உட்பட பல தேமுதிகவினர் கலந்து கொண்டனர்