கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அஃபெக்ஸில் அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை 8 மணி முதல் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ண புரதத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது இரவு 10 மணி வரை நடந்தது.
13 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அலுவலகமான அஃபெக்ஸிற்கு நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.
இதில், அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது. சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.