"Esthell Entertainer" நிறுவனத்தின் தயாரிப்பில், புது அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படைப்புதான் “அழகிய கண்ணே”.
இத்திரைப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர் R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார்.

மிக விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.