10-ஆண்டுகளாக போராடிய பழங்குடி இருளர்கள் மக்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய- மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம். சரயு!

கிருஷ்ணகிரி அடுத்து அக்ரஹாரம் அஞ்சல் பால்சுனை கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் இன மக்கள் பத்து ஆண்டுகளாக இருளர்கள் சான்றிதழ் கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு செய்து வந்தனர்.

பத்து ஆண்டுகளாக அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வந்தனர், புதியதாக மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள சரயு உடனடியாக அவர்களது மனுக்களை பரிசீலனை செய்து துரிதை நடவடிக்கை எடுத்து பழங்குடி இருளர்களுக்கு 55 நபர்களுக்கு பழங்குடி சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார்.

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாநில தலைவர் பழங்குடி பாலு என்.ஜி.ஓ. ஸ்ரீதேவி, மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் சுப்பராயன் பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு மற்றும் ஏழை மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.