அரசு பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து மேளதாள தின்பண்ட சீர் வரிசைகளுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள்!

கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி மாணவர்களை ஊக்கி வித்த பொதுமக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று வரும் இந்தப் பள்ளியின் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாணவர்களின் பெற்றோர் தற்போது பத்தாம் வகுப்பு பயின்று வரும்  மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்தும் அந்த அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் மேளதாளங்கள் இனிப்பு வகை சீர் வரிசை தாம்பூல தட்டுகளுடன் மாணவர்களே ஊர்வலமாக அழைத்துச் சென்று பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்

பள்ளியின்  நுழைவாயிலில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது மலர் தூவி அன்புடன் வரவேற்றனர்

பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் இனிப்பு வகை லட்டு சாக்லேட் பிஸ்கட் ஆகியவற்றை வழங்கி ஊக்குவித்து கௌரவித்தனர் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது!

முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக திமுக செயலாளர் கோவிந்தராஜ் கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி முனியசாமி 4வது வார்டு உறுப்பினர் விஜயன்

கிராமத் தலைவர் சுப்பிரமணியன் ஜமாத் தலைவர் முகமது மீரா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.