கோவில்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம்!

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததானக் கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய துவக்கப்பள்ளியில் இன்று  154வது இலவச கண்சிகிச்சை  முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு புத்துயிர் ரத்ததானக் கழகச்செயலாளர் க.தமிழரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு காமராஜர் பேரவைத் தலைவர் நாஞ்சில் குமார் தொடங்கி வைத்தார்.

முகாமில் கலந்துகொண்ட என்பதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்விழிப் பரிசோதகர் ஜோதி கண்பரிசோதனை செய்தார். இருபது பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். 

முகாமில் கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி முனைவர். ஆ.சம்பத்குமார்,

நடராஜபுரம் பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத்தலைவர் P.செண்பகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஆவல்நத்தம் லட்சுமணன்,  மாவீரன் பகத்சிங் இரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், நிர்வாகி குருஜீ, மக்கள் நல அறக்கட்டளையின் தலைவர் மாரிமுத்து, நிர்வாகி ஜெகன், 

முகாம் ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி, 

செவிலியர் பொன்னுத்தாய்  ஆகியோர் கலந்துகொண்டனர்.