புதூரில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி அருகே பந்தயத்தை  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்!

 

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

11-06-2023 ஞாயிற்றுக்கிழமை காலையில் இரு போட்டிகள் நடைபெற்றது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  41 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.

பின்னர் மாலையில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சிறியமாட்டில் 16 ஜோடியும் பூஞ்சிட்டு 35 ஜோடி மாடுகளும்  என 51 ஜோடி மாடுகள் போட்டியில் சீறிப்பாய்ந்தன.

மாலையில் நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயத்தை  முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.இன்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள், தனஞ்செயன், தனபதி, மகேஷ், பால்ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்திராமசந்திரன், எட்டயபுரம் நகரசெயலாளர் ராஜ்குமார், புதூர் அதிமுக நிர்வாகிகள் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.