தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே "லோக் ஆயுக்தா" கொண்டுவர முடியும் - சாதனை விளக்க கூட்டத்தில் பாஜக நிர்வாகி பேச்சு!

தமிழக முழுவதும் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்   பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு புதூர் மேற்கு மண்டல் சார்பில் மாவில்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி பெஞ்சமின் பாண்டியன் பேசியபோது, 

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே "லோக் ஆயுக்தா" மசோதா கொண்டுவர முடியும் எனப் பேசினார். இக்கிராமத்தில் நடைபெற்ற இந்த பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்‌,கூட்டம் மாவில்பட்டி ஜெயபால், மணிகண்டன், எல்லப்பன், ஆகியோர் ஏற்பாட்டில்.மண்டல் தலைவர் சிவபெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில்  மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் G.பெஞ்சமின் பாண்டியன் M.வெங்கடேசன், S.நாகராஜ், KKR கணேசன், வேல் முருகன், ஆடிட்டர் செல்வராஜ், A P சீனிவாசன், P. சீனிவாசன், சுபி பிரேம் ஆகியோர் கலந்து கொண்டு   மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி பெஞ்சமின் பாண்டியன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.