தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் வீட்டின் அருகே மது அருந்திய திமுக இளைஞரணி செயலாளரை தட்டிக்கேட்ட தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மாமா மருமகனை கத்தியால் வெட்டி தாக்கிய திமுக இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட திமுகவினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி அருகே உள்ள தருவை குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நிக்லஸ் அண்ஷோ மற்றும் இவரது தாய் மாமா நிக்கோலஸ் இருவரும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அனிட்டன் மற்றும் திமுகவைச் சேர்ந்த மில்லன், ஸ்நோவின், கெவின், அஸ்வின், சோவின் உள்ளிட்டோர் மது அருந்தியபடி சத்தமாக பேசிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இதை நிக்கோலஸ் அண்ஷோ ஏன் இவ்வாறு இடையூறாக மது அருந்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறிர்கள் என்று கேட்டுள்ளார் இதைத் தொடர்ந்து திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனிட்டன் உள்ளிட்ட திமுகவினர் நிக்குலஸ் அன்ஷோவை
தாக்கியதுடன் அன்சோவை காப்பாற்ற வந்த அவரது மாமா நிக்கோலசை கத்தியால் தலையில் வெட்டி தாக்கியுள்ளனர்.
மேலும் தங்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனவும் மிரட்டி உள்ளனர்
இதை அடுத்து காயம் அடைந்த நிக்கோலஸ் அண்ட் சோ மற்றும் நிக்கோலஸ் இருவரும் தூத்துக்குடி அரசுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் தங்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனிட்டன் உள்ளிட்ட திமுகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக காயம் அடைந்தவர்கள் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.