கமுதி பகுதியில் தொடர் கனமழையினால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் -உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது இழப்பீடு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி அருகே உள்ள கிளாமரம், நீராவி கரிசல்குளம், காவடிபட்டி, கோரப்பள்ளம், மேல ராமநதி, கீழ ராமநதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மானாவரி பயிராக அப்பகுதி விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்தனர்,கமுதி சுற்றுவட்டார பகுதியில் 23-11-2023 வியாழக்கிழமை இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான மிளகாய் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தன, இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு
தொடர் கனமழையினால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்......
Admin
1 நிமிட வாசிப்பு