கமுதி அருகே சந்தன மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அய்யனார் குளம் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் 12ம் வருட. அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது,முன்னதாக யாகசாலை பூஜை, மகா கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூரணாகுதி தீபாதாரணை நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார் வேத மந்திர முழங்க மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு ஆலயம் வலம் சென்று விமான கோபுரம் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது,அதனைத் தொடர்ந்து சந்தன மாரி அம்மனுக்குபால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம்16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
சந்தன மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!
Admin
1 நிமிட வாசிப்பு