தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குமராபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும், நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் பகுதியை  சேர்ந்த 21 குழந்தைகள் என 22 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஒன்பதாம் தேதி மழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.குமராபுரம் பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம்  சேர்ந்த குழந்தைகள் தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மேலும் பள்ளிக்கு சென்றுவர போதுமான வசதி இல்லை என்றும், மெயின் ரோடு பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் அந்தவழியாக குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் , விவசாய நிலங்கள் வழியாக குழந்தைகள் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் அந்தப் பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் சிலர் தங்களது நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து விடுவதால் பள்ளிக்கு குழந்தைகள் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பள்ளியை வடக்கு குமராபுரத்திற்கு  மாற்ற வேண்டும், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலையத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி கடந்த 9ந்தேதி முதல் என்று கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.