நாகலாபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கால்வாய் பாலக் கட்டுமான பணியை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பு, ரூபாய் 10 லச்சம் மதிப்பீட்டில் நீர் வரத்து கால்வாய் பாலம்
கட்டுமான பணியை, விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி மாவட்ட பிரதிநிதிகள் V.C காளிமுத்து, ராமலிங்கம் கிளைச் செயலாளர் செந்தில்வேல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.