தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் தூத்துக்குடி ஊரக கோட்டம் விளாத்திகுளம் உபகோட்டம், விளாத்திகுளம் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட வில்வமரத்துப்பட்டியில் ரூ.4.91-லட்சம் மதிப்பீட்டில் 25-KVA திறன் கொண்ட கூடுதல் புதிய மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர் செல்வகுமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கிளைச்செயலாளர் தங்கராஜ்பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
