அமுத கவி உமறுப் புலவரின் 381 வது பிறந்தநாள் விழா-   அமைச்சர் கீதாஜீவன்  மரியாதை!   சீறாப்புராணம் எழுதிய அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் 381ஆவது பிறந்தநாளையொட்டி  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் உள்ள அமுதகவி உமறுப்புலவர் நினைவு மணிமண்டபத்தில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்க்கண்டேயன்  ஆகியோர்  மலர்போர்வை வைத்து மரியாதை செலுத்தினர் ,தொடர்ந்து அமுதகவி உமறுப்புலவரின் வாரிசுதாரரான உ.காஜா மைதீனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள். இந்நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி,  கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.