தமிழகத்தில் பால் விலையை  குறைத்தனர். இப்போது, உயர்த்தி விட்டனர். அதை யாரும் சொல்லமாட்டார்கள் சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றி மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் - தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி!

தூத்துக்குடி மாவட்ட பிஜேபி கட்சி அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது,பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டு காலத்தில் இதுவரை 42  கோடி பேருக்கு மேலாக எல்லோருக்கும் வங்கிகளில் பணம் போடும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.  

பாரத பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கூரை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாறியுள்ளது,பொருளாதார ரீதியில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தது விடும்.இந்தியாவை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரிகளை மத்திய அரசு அதிகமாக கொடுத்தது. தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லும் ஒரே தலைவராக பாரத பிரதமர் மோடி இருக்கிறார்.

தமிழகத்தில் பால் விலையை  குறைத்தனர் இப்போது உயர்த்தி விட்டனர் அதை யாரும் சொல்லமாட்டார்கள் சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றி மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இலவசமாக கேஸ் கொடுத்திருக்கிறார்கள் அதை செல்லமாட்டிக்கிறார்கள்