தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆலையிலிருந்து ஜிப்சம் மற்றும் அபாயகர கழிவுகளை அகற்றுவதற்காக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட துணை ஆட்சியர்  கௌரவ் குமார் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர்  ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் பணியை துவங்கினர்.  இதையொட்டி ஆலை வாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆலையை பராமரிப்பு மற்றும் கழிவுகளை அகற்ற  அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஜிப்சம் மற்றும் அபாயகரமான கழிவுகளை அகற்றுவது பசுமை வளாகம் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்காமல் தமிழக அரசு சார்பில் துணை ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் ஹேமந்த்,  தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுரேஷ் மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் சரவணன், தீயணைப்பு துறை மாவட்ட துணை அலுவலர் ராஜு,  ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தனர். 

இந்த குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் பணியை துவங்கினர். 

 இதற்காக தீயணைப்பு துறை அதிகாரி,  மாசு கட்டுப்பாட்டு அலுவலர், புறநகர் டிஎஸ்பி என தனித்தனியாக அதிகாரிகள் வாகனத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளே சென்றுள்ளனர். இது தொடர்ந்து சார் ஆட்சியர் கௌரவகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை வளாகத்திற்குள் சிப்சம் மற்றும் கழிவுகள் உள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

 இதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முன்பு சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது