தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள சிபிஎஸ்இ பள்ளியான "ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில்" நடைபெற்ற அறிவு மற்றும் திறன்கள் கண்காட்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் திருமதி.அனிதா மார்கண்டேயன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் கண்கவர் கண்காட்சியை பார்வையிட்டார்கள்.

உடன் விருதுநகர் மாவட்ட வேளாண்மை துறை இராமமூர்த்தி, அம்பாள் கல்வி குழும சேர்மன் வீமராஜ்,பள்ளி நிர்வாக அதிகாரி ராகவன், பள்ளியின் முதல்வர் மாயாதேவி, பள்ளி தலைமை ஆசிரியை பத்மா மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.