வில்வ நாதர் ஆலய மண்டல பூஜை விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்ற களைகள் !
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கரிசல்குளம் கிராமத்தில் ஸ்ரீ வில்வநாதன் ஆலய மண்டல பூஜை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து காளைகள் சென்றன.
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரட்டை மாட்டு வண்டி பந்தய காளைகள் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கமுதி -சாயல்குடி சாலையில் பந்தய எல்கை நிர்ணயிக்கப்பட்டு பங்கேற்ற காளைகள் பரிசுகளைப் பெற வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து முந்தி சென்றனர்.முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவு பரிசுகளை ரேக்ளா பந்தய மாநில துணைத் தலைவர் சித்திரங்குடி ராமமூர்த்தி வழங்கி கௌரவித்தார்.மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்டறித்து சென்றனர்.
தமிழ்நாடு
கடலாடி - கரிசல்குளம் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்ற களைகள் !
Admin
1 நிமிட வாசிப்பு